ஆதார் - பான் இணைப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

ஆதார் - பான் இணைப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு


கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பணிகள் முடங்கியிருக்கும் நிலையில் ஆதார் - பான் எண் இணைப்புக்கு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைய இருந்த கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


புது தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், 2018 - 19-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.

வருமான வரி கணக்குத் தாக்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

மேலும், ஆதார் - பான் எண் இணைப்புக்கான அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment