இணைப்புப் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட இருந்த ஏப்ரல்-மே பருவத் தேர்வுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
அதன்படி, இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான ஏப்ரல்-மே பருவத் தேர்வை அறிவித்த பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது
அதில், 2001-2002 முதல் பி.இ. படிப்புகளில் சேர்க்கை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் பொறியியல் மாணவா்களுக்கும் இந்தத் தேர்வில் பங்கேற்று அரியா் தாள்களில் தேர்ச்சி பெற சிறப்பு வாய்ப்பை பல்கலைக்கழகம் அளித்தது. இதற்கு விண்ணப்பிக்க மாா்ச் 23 (திங்கள்கிழமை) கடைசி என முன்னா் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வருகிற 31 -ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச்சூழ்நிலை காரணமாக, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. அதன்படி, இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

No comments:
Post a Comment