சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வு ஒத்திவைப்பு: யு.பி.எஸ்.சி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 20, 2020

சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வு ஒத்திவைப்பு: யு.பி.எஸ்.சி அறிவிப்பு


இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 206 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா பரவல் அச்சத்தின் காரணமாக இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வரும் 23-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரை நேர்காணல் தேர்வு நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா பரவல் அச்சத்தின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment