வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவியின் பெரிய திரையில் பார்ப்பது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 30, 2020

வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவியின் பெரிய திரையில் பார்ப்பது எப்படி?


கூண்டிற்குள் அடைக்கப்பட்ட பறவைகளைப் போல் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் அடைக்கப்பட்ட அனைவரும் தங்கள் நண்பர், உறவினர் மற்றும் அன்புக்குரியவர்கள் என்று அனைவரும் இப்பொழுது ஒன்றுகூடுவது வாட்ஸ்அப் கால் அழைப்பில் தான்.


 இந்த கால் அழைப்புகளை எப்படி நேரடியாக உங்கள் டிவியில் பார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதென்றால் தெரிந்துகொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் கால்லிங் சேவை

வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டில் அழைப்பு என்ற அற்புதமான அம்சத்தைச் அறிமுகம் செய்தது. முதலில் இச்சேவை பயனர்கள் ஒருவருக்கொருவர் வடிவத்தில் தொடர்பு கொள்ள அனுமதித்தது, பிறகு இந்த அம்சம் குரூப் கால்லிங் சேவைக்கும் அனுமதி வழங்கியது.

இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டும் போதும் உங்களால் வாட்ஸ்அப்-ல் அழைப்பை மேற்கொள்ள முடியும்.


பெரிய திரையில் வாட்ஸ்அப் பயன்படுத்த சிறிய ட்ரிக்

வாட்ஸ்அப் அழைப்புகள் பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் மட்டுமே செய்யப்படுகின்றன, அதற்கு மட்டும் தான் வாட்ஸ்அப் பயன்பாடும் அனுமதிக்கிறது.

ஆனால், சிறிய திரையில் மணிக்கணக்கில் வெறித்துப் பார்ப்பதற்கு வசதியாக இல்லாத நபர்களுக்கு இந்த நிலையை மாற்ற ஒரு சிறிய ட்ரிக் இருக்கிறது. அப்படி சிறிய திரையில் கால்லிங் செய்ய விருப்பமில்லாதவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.


வாட்ஸ்அப் அழைப்புகளை நேரடியாக உங்கள் டிவி திரைக்கு மாற்றிப் பயன்படுத்தலாம் என்று எப்போதாவது யோசித்தீர்களா? அப்படி யோசித்திருந்தால், Chromecast முறைப்படி அது சாத்தியமே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

 பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிறோம்கேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. Cast என்ற சேவை கொண்டு உங்களின் வாட்ஸ்அப் கால்லிங் அழைப்புகளை கேஸ்ட செய்துகொள்ள முடியும்.cast என்றால் என்ன?

cast என்பது உங்கள் போனில் உள்ள செயல்பாட்டை அப்படியே அருகில் உள்ள உங்கள் பிற சாதனங்களில் பிரதிபலிக்கச் செய்யும் ஒரு சேவையாகும். இந்த சேவையைப் பயன்படுத்தி உங்களின் வாட்ஸ்அப் கால்லிங் அழைப்புகளை எப்படி நேரடியாக உங்கள் ஸ்மார்ட் டிவியில் பிரதிபலிக்கச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

செயல்முறை 1

முதலில், HDMI கேபில் கொண்டு உங்கள் Chromecast சாதனத்தை உங்கள் டிவியுடன் இணைக்கவும்.

செட்டிங்ஸ் சென்று Connected Devices/Connectivity என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

பின் Connection Preferences என்ற விருப்பத்திற்குச் செல்லவும், பட்டியலிலிருந்து "cast" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

உங்கள் Chromeecast சாதனம், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் தோன்றும் வரை சிறிது வினாடிகள் காத்திருக்கவும்.

செயல்முறை 2

அருகில் கிடைக்கக்கூடிய சாதனங்களின் பட்டியலிலிருந்து உங்கள் "Chromecast " சாதனத்தின் பெயரைத் தேர்வு செய்யுங்கள்.

Start Now என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் போன் திரையை அப்படியே டிவி திரைக்குப் பிரதிபலிக்கச் செய்து பயன்படுத்தத் துவங்கவும்.


போட்டோஸ், கேம் அனைத்தையும் கேஸ்ட செய்யலாம்

இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு திரை, உங்களின் டிவியுடன் வெற்றிகரமாக கேஸ்ட செய்யப்பட்டிருக்கும். இப்போது நீங்கள் விரும்பும் , போட்டோஸ், கேம் அல்லது உங்கள் வாட்ஸ்அப் சாட் அல்லது உங்கள் வாட்ஸ்அப் கால் போன்று அனைத்து விஷயங்களையும் டிவி திரைக்கு மாற்றி நீங்கள் பயன்படுத்திகொள்ளலாம்.

முக்கிய குறிப்பு

இந்த கேஸ்டிங் சேவை இணைப்பை வெற்றிகரமாக நிகழ்த்த, உங்கள் Chromecast சாதனம் மற்றும் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனம் என இரண்டும் ஒரே வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் ஆண்ட்ராய்டு திரை பயன்பாட்டை உங்கள் டிவியில் பிரதிபலிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment