பள்ளி செல்லா குழந்தைகள் யார்? கணக்கெடுப்பு தள்ளிப்போகும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 30, 2020

பள்ளி செல்லா குழந்தைகள் யார்? கணக்கெடுப்பு தள்ளிப்போகும்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை, ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க, ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, 14 வயதுக் குட்பட்ட அனைவரும் கல்வி பெற வேண்டியது அவசியம்.இதை உறுதி செய்யும் வகையில், பள்ளிக்கு செல்லாமல் இடைநிற்றல் தழுவுதல், குடும்ப சூழலால், பள்ளிப்படிப்பை தொடராத குழந்தைகளுக்கு, அடிப்படை கல்வி அளிக்க, வழிவகை செய்யப்படுகிறது.

இதற்கான கணக்கெடுப்பு பணிகள், ஏப்., இறுதியில், துவங்குவது வழக்கம். ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஊழியர்கள் கொண்டு, கணக்கெடுப்பு நடத்தி, இக்குழந்தைகள் ஜூன் மாதம், பள்ளியில் சேர்த்து விடப்படுவர். இக்குழந்தைகள் தொடர்ந்து கல்வி பெற, வருகைப்பதிவு கண்காணிக்கப்படும்.

தற்போது அமலில் உள்ள, ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு தான், வைரஸ் தொற்றின் தன்மைகுறித்து தெரியவரும்.

 இதனால், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, தள்ளி போக வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை, குடியிருப்பு பகுதிகளில், மேற்கொள்ள வேண்டும்.

இதனால், கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, நாடு இயல்பு நிலைக்கு திரும்பியபின், மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, அறிவிப்பு வெளியானதும், இதுசார்ந்த ஆயத்த பணிகள் துவங்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment