பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி நடைமுறைகள் நிறுத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 23, 2020

பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி நடைமுறைகள் நிறுத்திவைப்பு


கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020-21 கல்வியாண்டு அனுமதி நடைமுறைகள் அனைத்தையும் ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) நிறுத்தி வைத்துள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மாா்ச் 31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான ஆய்வுப் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மாா்ச் 31 வரை நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டது.


இந்த நிலையில், கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளை மூட மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதன் காரணமாக, தமிழகம் உள்பட பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான 2020-21 அனுமதி நடைமுறைகள் முழுவதையும் ஏஐசிடிஇ நிறுத்திவைத்துள்ளது. மீண்டும் அனுமதி நடைமுறைகள் தொடங்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் ஏஐசிடிஇ-யின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment