பொம்மலாட்டம் வாயிலாக நரியின் பள்ளிக்கூடம்! பாடம் நடத்திய மாணவர்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 8, 2020

பொம்மலாட்டம் வாயிலாக நரியின் பள்ளிக்கூடம்! பாடம் நடத்திய மாணவர்கள்!

சின்னஞ்சிறு சிட்டுகளாய், குட்டி தேவதைகளாய் பைக்கட்டை துாக்கிக் கொண்டு பள்ளிகளுக்கு செல்கின்றனர் குழந்தைகள்.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். திறமைகள் பலவிதம். ஆனால் கற்பிக்கும் கல்வியும், கற்பிக்கும் விதமும் ஒரே விதம்.இதை தவிர்த்து, எப்படி கற்பிக்க வேண்டும் என, சின்னமேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆண்டுவிழாவில் பொம்மலாட்டம் வாயிலாக 'பாடம்' நடத்தினர்.


இனி பொம்மலாட்டம் காணலாம்...வாருங்கள்!மூலை முடுக்கெல்லாம் பள்ளிக்கூடங்கள் முளைத்து விட்டன. காட்டிலும் ஒரு பள்ளியை துவங்கினால் என்ன... என்ற யோசனையுடன், உதயமாகிறது ஒரு நரியின் பள்ளி.'இப்பள்ளியில் என்ன நடக்கிறது என பார்ப்போமா...' என, மைக்கில் ஒரு குரல் ஒலித்தது.


விலங்குகள் போல வேடமிட்டு மாணவர்கள் நடிப்பார்கள் என எதிர்பார்த்து, காத்திருந்த கூட்டத்துக்கு, பெரும் வியப்பளித்தது அந்த நாடகம்.வெள்ளை திரைசீலைக்குப் பின், பொம்மைகளை காட்டியபடி, குரல் மட்டுமே அந்த நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருந்தது.நரி: எங்கள் பள்ளியில், குதிரை சவாரி, நீச்சல், மரம் ஏறுதல், துப்பாக்கி சுடுதல் என, அனைத்து பயிற்சிகளும் அளிக்கிறோம்.


உங்கள் குழந்தைக்கு ஆர்வமே இல்லாவிட்டாலும் கூட பிரச்னையில்லை... தேர்ந்த பயிற்சியின் மூலம், வித்தகர்களாக மாற்றி விடுவோம்.யானை: குரங்கு, வவ்வால், காகம், கிளி, குயில் என அனைவரும் சேர்ந்துவிட்டனர். சிங்கராஜாவும் சேர்ந்ததால், நம் பள்ளிக்கு மவுசு கூடிவிட்டது நரியாரே.நரி: இனி எதற்கு காத்திருக்கிறீர்கள்...ஆகட்டும்


!உடனே, 'ஆறு மாதங்களுக்கு பிறகு' என, திரையில் அறிவிப்பு தோன்றுகிறது.யானை: நரியாரே... எல்லா பயிற்சியும் வழங்கி விட்டோம்.


சிங்கத்துக்கு நீந்த தெரியவில்லை; காகத்துக்கு பாட தெரியவில்லை. புலி, மரம் ஏற அடம் பிடிக்கிறது. இவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்றே தெரியவில்லை.நரி: அடே மங்குனி வாத்தியாரே...! எல்லா கலைகளையும் எல்லாராலும் கற்றுக் கொள்ள முடியாது.

அந்தந்த விலங்குக்கு, என்ன திறமை இருக்கிறது என கண்டறிந்து, அதன்படி பயிற்சி அளியுங்கள்.வவ்வால்: இப்படி பயிற்சி அளிப்பது மட்டும், பள்ளிக்கூடங்களின் பணியல்ல. அவர்களுக்கு நல்ல போதனைகளை கற்று கொடுங்கள்.


காடு நம் சொத்து. அதை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக்கூறுங்கள். மனிதர்களிடம் குறைந்து கொண்டே வருகிற, அறத்தை சொல்லி கொடுங்கள்.

நரி:


ஆமாம் வவ்வால். நீங்கள் கூறியது போலவே பின்பற்றுகிறோம்.பின்னணி இசையுடன் முடிந்தது பொம்மலாட்டம். 'குழந்தைகளின் ஆர்வத்தை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைக்கு தீனி போடுங்கள்' என்ற கருத்துக்கு, கரவொலி காதை பிளந்தது.

No comments:

Post a Comment