மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 31, 2020

மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும்?


கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில், தவிர்க்க முடியாத நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள், மரணம் - இறுதிச் சடங்குகள், உடல் நலக் குறைவு பிரச்சினைகள் போன்றவற்றுக்காக வெளியே செல்வதற்கு மக்களால் சிறப்பு அனுமதியைப் பெற முடியும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் மாவட்டத்துக்கு உள்ளேயே செல்ல வேண்டுமானால் வட்டாட்சியர்களிடம் அனுமதிக் கடிதம் பெற வேண்டும். சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை மண்டல அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.


ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல வேண்டுமானால், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரிடமும் சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையரிடமும் அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிவுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்குக் கடிதமொன்றையும் அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ர அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment