அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 31, 2020

அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு


அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்று ஊருக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை மாநகராட்சி துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம். அதன்படி, சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிக் கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.


அதேபோன்று மாவட்டத்திற்குள்ளாக பயணம் மேற்கொள்வோர் தாசில்தாரிடம் அனுமதி பெற்று பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment