கொரோனா வைரஸ் அச்சம் சூழ்ந்துள்ள வேளையில் நிதி சார்ந்த பல முக்கிய அறிவிப்புகளையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிதான் கடைசி நாளாக இருந்தது.
தற்போது வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30, 2020 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தாமதமாக வரி செலுத்தினால் வசூலிக்கப்படும் 12 சதவிகித வட்டி என்பது 9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி வருவாய் மீது பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் (TDS) தொகைகளுக்கு 18 சதவிகித வட்டி வசூலிக்கப்படும்.
ஆனால், தற்போது 9 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், Vivad se Vishwas என்றழைக்கப்படும் திட்டம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Vivad se Vishwas என்றால் வருமான வரி தொடர்பான வழக்குகளுக்கான தீர்வு வழங்கும் மத்திய அரசின் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துவோருக்கான கால அவகாசம்தான் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய கூடுதல் 10 சதவிகித கட்டணத்தையும் தற்போது செலுத்தத் தேவையில்லை

No comments:
Post a Comment