3 மாதங்களுக்கு ATM களிலிருந்து பணம் எடுக்க கட்டணம் இல்லை!:மினிமம் பேலன்ஸூம் தேவையில்லை..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

3 மாதங்களுக்கு ATM களிலிருந்து பணம் எடுக்க கட்டணம் இல்லை!:மினிமம் பேலன்ஸூம் தேவையில்லை..!

அடுத்த மூன்று மாதங்களுக்கு ஏ.டி.எம்-களில் இருந்து பணம் எடுக்கக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு நிதி சார்ந்த மனச்சுமைகளைக் குறைக்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், 'எந்தவொரு ஏடிஎம் மையத்திலும் எந்தவொரு ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.


அடுத்த மூன்று மாதங்களுக்கு இதற்கென தனிக் கட்டணம் வசூலிக்கப்படாது. அதேபோல் அடுத்த மூன்று மாத காலங்களுக்கு உங்களது வங்கிக்கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.இதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கும் எவ்வித கட்டணங்களும் இல்லை' என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment