கொரோனா பரவும் அச்சத்தின் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் தங்களை வீட்டிலிருந்து விரட்டுகிறார்கள் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். மருத்துவர்களும், செவிலியர்களும், பிற மருத்துவ ஊழியர்களும் இரவும் பகலுமாக உழைத்துவருகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா பரவும் அச்சத்தின் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் தங்களை வீட்டிலிருந்து வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய உள்துறை அமைச்சருக்கு அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்
.அந்தக் கடிதத்தில், 'வாடகை வீட்டில் குடியிருக்கும் கொரோனா மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ ஊழியர்களை, கொரோனா பரவும் என்ற அச்சத்தின் காரணமாக வீட்டின் உரிமையாளர்கள் வீட்டைக் காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.
பலரைக் கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். பல மருத்துவர்கள் வீடுகளின்றி நடுரோட்டில் நிற்கின்றனர். இந்தச் சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவதற்கே இந்தக் கடிதம். அவர்கள் செல்வதற்கு இடமில்லாமல் இருக்கின்றனர்.
இத்தகைய மோசமான செயல்களைக் கண்டிக்கிறோம். மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றக் கூடாது என்று விரைவில் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்காக ஓய்வின்றி உழைக்கும் எங்களது சேவையை அதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருக்கும் முழு அடைப்பின் காரணமாக பல ஊழியர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே, அவர்கள் மருத்துவமனைக்கு சிரமமின்றி வருவதற்கு ஏற்ற வாகன வசதிகளை ஏற்பாடு செய்யவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment