சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவு வகைகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதித்துள்ளவர்களுக்கு சென்டரல் பகுதியிலுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. மேலும், கொரோனா அறிகுறி உள்ளவர்களும் இங்குதான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கொரோனா சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவு வகைகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பரிசோதனை முயற்சியாக முதலில் 2 ரோபோக்களை அப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதைத் தொடா்ந்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரோபோக்கள் நோயாளி இருக்கும் அறைக்கு முன்பு சென்றதும் ஒலி எழுப்பும். நோயாளி கதவைத் திறந்து ரோபோவிடமிருந்து உணவு மற்றும் மருந்தை எடுத்துக் கொள்ளலாம். அப்போது, மருத்துவா்களும், செவிலியா்களும் ரோபோவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரை வழியாக வீடியோ அழைப்பில் நோயாளிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த ரோபோக்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வரும் என் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment