65 லட்சம் பேருக்கான பென்சன் பணம் உரிய நேரத்தில் வந்து சேரும்- EPFO உத்தரவாதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

65 லட்சம் பேருக்கான பென்சன் பணம் உரிய நேரத்தில் வந்து சேரும்- EPFO உத்தரவாதம்

தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் இந்தியாவில் மட்டும் 65 லட்சம் பேருக்கான பென்சன் பணத்தை விநியோகித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் பென்சன் வாங்கும் அத்தனைப் பேருக்கும் உரிய நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருக்க வேண்டும் என கள அலுவலகங்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும் இதை உறுதிபடுத்தும்படி வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் வங்கிகளில் பென்சன் பணத்தை முன்னதாகவே டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பென்சன் வாங்குவோருக்கு எவ்வித தாமதமும் இன்றி உரிய நேரத்தில் வழக்கம்போல் பணம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment