மக்கள்தொகை கணக்கெடுப்பு, NPR பணிகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

மக்கள்தொகை கணக்கெடுப்பு, NPR பணிகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.



 இது, 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.

அதேபோல், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்படும் என்பிஆர் கணக்கெடுக்கும் பணிகளும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்குவதாக இருந்தது.

இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன.



இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் தற்காலிகமாக ஒத்திவக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது அதிகாரிகள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதாலும், மக்கள் அதிக அளவில் கூட வேண்டியிருக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment