கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம் அறிமுகம் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 24, 2020

கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம் அறிமுகம் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்


நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா பாதிப்பை கண்டறியும் கிட்டை புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி செல்யூஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.


 இந்த புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என அந்த தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது

.இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கண்டுப்பிடித்த இந்த புதிய கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகைய கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம், பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment