ஒரு மாதம் அனைவருக்கும் ரேஷன் இலவசமாக வழங்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 19, 2020

ஒரு மாதம் அனைவருக்கும் ரேஷன் இலவசமாக வழங்க உத்தரவு

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.


 கொரோனா பாதிப்பு காரணமாக நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட மக்களின் வாழ்க்கை, பொருளாதார துறையை ஊக்கப்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிராமிய தொழில் உறுதி திட்டம் அமல்படுத்தப்படும்.


 ஏப்ரல் மாத சமூக ஓய்வூதியம் இந்த மாதமே வழங்கப்படும். 2 மாத ஓய்வூதியம் ஒரே தவணையாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,320 கோடி ஒதுக்கப்படும்.

அந்தியோதயா பிரிவில் உள்ள குடும்பத்தை சேர்ந்த சிலர் ஓய்வூதியம் வாங்குவதில்லை. அந்த சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும். கேரளாவில் அனைவருக்கும் ஒரு மாத உணவு தானியங்கள் ரேஷனில் இலவமாக வழங்கப்படும்.


வறுமை கோட்டிற்குகீழ் உள்ள அந்தியோதயா பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். ரூ.20க்கு மதிய உணவு கிடைக்கும் வகையில் 1000 ஓட்டல்ஏப்ரலில் தொடங்கப்படும். மின்சாரம், குடிநீர்கட்டணம் செலுத்த ஒரு மாதம் அபராதம் இன்றி கால அவகாசம் வழங்கப்படும் என்றார்

No comments:

Post a Comment