கொரோனா தாக்கம் : பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தம் ..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 25, 2020

கொரோனா தாக்கம் : பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தம் ..!


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு ஆன்லைன் விற்பனையை நிறுத்துவதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது.


கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசு எச்சரித்துள்ளது.

இந்த வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்தால் கொரோனா பரவலை முற்றிலும் தவிர்த்து விடலாம் என்பதை கருத்தில் கொண்டு பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுத்தபட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விறபனை என அமேசான் அறிவித்த நிலையில் பிளிப்கார்ட் விற்பனையை நிறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment