10ம் வகுப்பு திறனாய்வு தேர்வு தள்ளி வைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 24, 2020

10ம் வகுப்பு திறனாய்வு தேர்வு தள்ளி வைப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த வேண்டிய, தேசிய திறனாய்வு தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப் படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் படிக்கும் மாணவர்களில், உதவித்தொகைக்கு தகுதி பெறும் மாணவர்களை தேர்வு செய்ய, இரண்டு கட்டமாக திறன் தேர்வு நடத்தப்படுகிறது. 




என்.டி.எஸ்.இ., என்ற, இந்த தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவில் முதல் கட்டமாகவும், அதில், தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு, மே, 10ல் நடக்கும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.



இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பல மாநிலங்களில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொது தேர்வுகளே இன்னும் நடத்தப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

பொது தேர்வு நடத்தப்படும் தேதியில், திறனாய்வு தேர்வையும் நடத்த முடியாது என்பதால்,
மே, 10ல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த, தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு, கால வரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது




.தேர்வுக்கான புதிய தேதியை, உரிய நேரத்தில் அறிவிப்பதாக, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment