2020-21ம் கல்வியாண்டுக்கு பிளஸ் 2 புத்தகம் வந்தாச்சு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 24, 2020

2020-21ம் கல்வியாண்டுக்கு பிளஸ் 2 புத்தகம் வந்தாச்சு!

ஊரடங்கிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடபுத்தகங்கள் நேற்று பாதுகாப்போடு திருப்பூருக்கு வந்து சேர்ந்தன.



அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒன்று முதல் பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் ஏப்., மாதத்திற்குள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு ஊரடங்கு காரணமாக பாடநுால் அச்சிடும் பணி கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டது



.இதனால் பள்ளிகள் திறந்ததும், புத்தகங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
அரசின் உத்தரவினால், கடந்த, 20ம் தேதி முதல் மீண்டும் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநுால் கழகம் துவக்கியது. தற்போது, அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.




இவை, நேற்று திருப்பூருக்கு வந்தது.இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரி பழனிசாமி கூறியதாவது:ஒன்று முதல் பிளாஸ் 2 வகுப்பு வரையுள்ள பாட புத்தகங்கள், 60 சதவீதம் ஊரடங்கிற்கு முன்பே வந்து சேர்ந்தன. மீதமுள்ள புத்தகங்களை அச்சிட்டு உடனுக்குடன் அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.



முதல்கட்டமாக திருப்பூருக்கு நேற்று பிளஸ் 2 வகுப்புக்கான, 3 ஆயிரத்து, 250 கணித புத்தகம் கொண்டுவரப்பட்டன. அவை, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment