வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 7, 2020

வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் நேற்று தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த சில மாவட்டங்களிலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது.


தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறினார்


. இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என கூறினார். சென்னையில் சில நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment