2022 வரை சமூக இடைவெளி தேவை': ஹார்வர்டு பல்கலை ஆய்வில் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 15, 2020

2022 வரை சமூக இடைவெளி தேவை': ஹார்வர்டு பல்கலை ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது வரை, உலக அளவில் 19.98 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்;

 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்தபாடில்லை.


 இந்நிலையில், 2022ம் ஆண்டு வரை, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே, கொரோனாவை ஒழிக்க முடியும் என, ஹார்வர்டு பல்கலை தெரிவித்துள்ளது.ஹார்வர்டு பல்கலையின் பொதுச் சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


கொரோனா வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சையோ மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால், சமூக இடைவெளி ஒன்றே இந்த வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வாகவுள்ளது.

 கடந்த 2003ல், சிறிய அளவில் தலைகாட்டிய 'சார்ஸ்' வைரஸ், இடைவெளிக்குப் பின், மிகவும் பெரிதாக வெடித்தது. அதேபோல் கொரோனா வைரசும் வெடிப்பதற்கு முன் அதை அழிக்கத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிப்பது அவசியம்.


இல்லையெனில் பிற வகை கொரோனா வைரசைப் போல ஒவ்வொரு குளிர்காலத்திலும் இது மீண்டும் தலைகாட்ட வாய்ப்புகள் உள்ளன.

சீனா வைரசிலிருந்து மீண்டு, ஊரடங்கைத் தளர்த்தியது. ஆனால், மீண்டும் அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை வீசத்துவங்கியதே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது

.இதனால், 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே இந்த வைரசிலிருந்து மனித குலத்தைக் காக்க முடியும். குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற அதிக பாதிப்புகள் உள்ள நாடுகளிலும் மக்கள் தொகை அதிகமுள்ள சீனா, இந்தியாவிலும் கட்டாயம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத ஊரடங்கு உத்தரவுக்கே பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இதனால், 2022 வரையில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, இந்தியாவுக்கு மட்டுமல்ல வல்லரசு நாடுகளால் கூட முடியாத ஒன்று. எனவே, கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதே தீர்வைத் தரும்.

No comments:

Post a Comment