தினமும் 4 ரூபாய்க்கு தரமான உணவு கொடுக்கும் பிரபல நடிகை !! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

தினமும் 4 ரூபாய்க்கு தரமான உணவு கொடுக்கும் பிரபல நடிகை !!

கொரோனா பீதியில் மக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மருத்துவர்களும் செவிலியர்களும் காவல்துறையினரும் துப்புரவு பணியாளர்களும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,


ஆந்திர மாநிலம் நகரி மற்றும் புத்தூர் பகுதியில் இருக்கும் பலருக்கு உணவு கிடைப்பது பெரும் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா குறைந்த விலையில் தரமான உணவை வழங்க முடிவு செய்து, ரூ.4 க்கு தரமான உணவை வழங்கி வருகிறார்.

கொரோனா வைரஸின் இந்த கோரமான சூழலில், அரசு மருத்துவமனைக்கு வரும் அனைவரும் பசியையும் ஆற்றி வருகிறார் ரோஜா. இது குறித்து பேசிய அவர்,


ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது.
அதனால் குறைந்த விலையில் தரமான உணவு கொடுக்க முடிவெடுத்து என்னுடைய டிரஸ்ட் மூலமாக சமையல் செய்து மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் மக்கள் எண்ணிக்கை அதிகமானதால் உணவு கூடத்தை விரிவு படுத்தி, தினமும் 5,000 பேருக்கு உணவு வழங்கி வருகிறேன். என்னால் முடிந்ததை நான் செய்து வருகிறேன். இதே போல எல்லாரும் ஏழைகளை காக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment