வீட்டிற்குள்ளேயே 42 கிமீ மராத்தான் ஓடிய வங்கி ஊழியர்: ஏன் தெரியுமா? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

வீட்டிற்குள்ளேயே 42 கிமீ மராத்தான் ஓடிய வங்கி ஊழியர்: ஏன் தெரியுமா?

கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக வங்கி ஊழியர் ஒருவர் தனது வீட்டிற்குள்ளேயே 42 கிமீ மராத்தான் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக வங்கி ஊழியர் ஒருவர் தனது வீட்டிற்குள்ளேயே 42 கிமீ மராத்தான் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.


கேரளாவின் கொச்சி நகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50). இவர் கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட பெடரல் வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.


 இவர்தான் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர். இதற்கு முன்னால் இவர் மும்பையில் நடைபெற்ற மராத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் கூறியதாவது:

ஞாயிறு காலை 10.30 மணியளவில் நான் எனது ஓட்டத்தைத் துவக்கினேன். எனது வீட்டின் சாப்பிடும் அறையிலிருந்து படுக்கை அறைக்கு ஓடி, அங்கிருந்து திரும்பினேன்.

ஒரு பக்கம் என்பது 15 மீட்டர் ஆகும். எனவே ஒருமுறை சென்று திரும்பினால் 30 மீட்டர் ஆகும். எனவே மதியம் 2.30 மணியளவில் நான் நிறைவு செய்த போது 42 கிமீ கடந்திருந்தது.


எனது தந்தை, மனைவி மற்றும் இரு குழந்தைகள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். ஓடியதால் தரையில் வழிந்திருந்த வியர்வையை அவர்கள் தொடர்ந்து தூய்மை செய்து கொண்டிருந்தார்கள்.

கரோனாவை நாம் வெல்ல வேண்டுமென்றால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை உணடாக்கவே நான் இந்த முயற்சி எடுத்தேன். வெளியில் செல்ல முடியாதவாறு வீட்டில் இருக்க நேர்ந்தாலும் நம்மால் இதைச் செய்ய முடியும் என்பதை நான் மக்களுக்கு நிரூபித்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெவித்தார். 

No comments:

Post a Comment