இந்த தேதி வரை முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான முழு தொகை வழங்கப்படும்: ரயில்வே - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

இந்த தேதி வரை முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான முழு தொகை வழங்கப்படும்: ரயில்வே

வரும் மே மாதம் 3-ம்  தேதி வரையிலான காலக்கட்டத்தில் முன் பதிவு செய்திருக்கும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

அதே சமயம், இ-டிக்கெட் உள்பட, அதன் பிறகான நாட்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையும் ரத்து செய்யப்படுவதாகவும், தற்போதைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் வசதி மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். ஏப்ரல் 14-ம் தேதியோடு ஊரடங்கு நிறைவு பெற இருந்த நிலையில் தற்போது மே மாதம் 3-ம்  தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், அதுவரை ரயில் சேவையும் இருக்காது என்று ரயில்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment