மே 4 முதல் பஸ்கள் ஓடுமா?: மக்கள் எதிர்பார்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 26, 2020

மே 4 முதல் பஸ்கள் ஓடுமா?: மக்கள் எதிர்பார்ப்பு

 நாடு முழுதும், மே 3ம் தேதியுடன், ஊரடங்கு முடிவடையும் நிலையில், 4ம் தேதி முதல், பஸ்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, போக்குவரத்து துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா நோய் தொற்றின் தீவிரம், இன்னும் குறையவில்லை. 




இந்நிலையில், பொதுப் போக்குவரத்தை, மே 4 முதல் அனுமதித்தால் சரிவருமா என்பது குறித்து, சுகாதாரத் துறை தான் முடிவெடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல் படி, பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க தயாராக உள்ளோம்.


எனினும், அரசு பஸ்களை, தினமும் கிருமி நாசினி தெளித்து துாய்மைப்படுத்தவும், ஓட்டுனர், நடத்துனர்கள், முக கவசம் அணியவும், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவவும் அறிவுறுத்தி உள்ளோம். அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, பஸ்களை இயக்க தயாராக இருக்கும்படி, ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளோம்.





 மேலும், பஸ்களை தயாராக வைத்திருக்கும்படி, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணியரையும், முக கவசம் அணியுமாறு அறிவுறுத்த வேண்டும் என, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வழிகாட்டி உள்ளோம்.


 ஒருவேளை, மே 4 முதல், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில், தொழிற்சாலைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டால், அவற்றின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒப்பந்த அடிப்படையில், அரசு பஸ்களை இயக்க தயாராக உள்ளோம். அரசு அலுவலகங்களும், இந்த சேவையை பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment