கொரோனாவை விட கொடியது:எச்சரிக்கும் ஐநா! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 26, 2020

கொரோனாவை விட கொடியது:எச்சரிக்கும் ஐநா!

கொரோனா வைரசை கட்டுபடுத்த இந்தியா போராடி வரும் நிலையில், அடுத்ததாக வெட்டுக்கிளிகளால் ஆபத்து இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது.



இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 மேலும் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.. இதனிடையே அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும் என்று ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது


அதில், ஆப்பிரிக்காவிலிருந்து படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளுடன் சேர்ந்து ஏமன், ஈரான், சவூதி அரேபியா பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வந்தடையும் என்றும், அதன் பின் இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விளைநிலங்களை வெட்டுகிளிகள் கடுமையாக தாக்குவதால் பாதிக்கும் நிலை உருவாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.



இந்தியாவில் வெட்டுக்கிளிகள் பயிர்களை தின்று அழிக்கும்போது உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.. இதன் காரணமாக இந்தியாவில் வேளாண்மை கடுமையான பாதிப்பை சந்திக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். இந்த வெட்டுக்கிளிகள் தினமும் 35 ஆயிரம் பேருக்கான உணவு தானியங்களை தின்று அழித்துவிடும் என்றும், ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment