6 மாத விடுப்பை ஏற்க மறுத்து ஒருமாத கைக்குழந்தையுடன் பணியில் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி.! நெகிழ்ச்சி சம்பவம்.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 13, 2020

6 மாத விடுப்பை ஏற்க மறுத்து ஒருமாத கைக்குழந்தையுடன் பணியில் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி.! நெகிழ்ச்சி சம்பவம்.!

தனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் பெண் IAS அதிகாரி ஒருவர் தனது ஆறு மாத மகப்பேறு விடுப்பைக் கைவிட்டு, கொரோனா காரணமாக மீண்டும் தனது பணியில் சேர்ந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2013 ஆண்டு IAS தேர்வில் வெற்றிபெற்ற ஸ்ரீஜனா என்ற பெண் IAS அதிகாரி தற்போது ஆந்திராவில் கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சியின் (ஜி.வி.எம்.சி) ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டர் பயனரான சிகுரு பிரசாந்த் குமார் என்பவர் பதிவிட்டுல ஒரு ட்விட்டில், "2013 ஆண்டு IAS தேர்வில் வெற்றிபெற்ற திருமதி. ஸ்ரீஜானா ஆந்திராவில் கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சியின் கமிஷனராக பணியாற்றிவரும் நிலையியல், தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்ததால் அவருக்கு 6 மாத தாய்வழி விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா காரணமாக தனக்கு கொடுக்கப்பட்ட 6 மாத விடுப்பை ஏற்கமறுத்த அவர் தனது ஒரு மாத கைக்குழந்தையுடன் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளது அனைவர்க்கும் ஊக்கமளிக்கிறது எனவும், ஸ்ரீஜனா வேலை செய்யும் இடத்தில் தனது குழந்தையுடன் அவர் இருக்கும் படத்தையும் இணைத்துள்ளார்.

அந்த ட்வீட்டை கவனித்த ஸ்ரீஜனா, குழந்தையை என்னுடன் வைத்துக்கொள்ள அணைத்து பாதுகாப்பான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதகவும், குழந்தை என்னுடன் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருப்பதாகவும் ஸ்ரீஜனா நன்றி கூறி பதிலளித்துள்ளார்

No comments:

Post a Comment