பிரதமர் மோடி லைக் செய்த ' இ - பாக்ஸ் ' திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

பிரதமர் மோடி லைக் செய்த ' இ - பாக்ஸ் ' திட்டம்

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கல்லுாரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் 'ஆன் லைன்' மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களிடையே, அதிகரிக்கும் நோக்கில் 'ஏம்பிசாப்ட்' நிறுவனம் இ-பாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


இத்திட்டத்தில் நாடு முழுவதும், 250 கல்லுாரி, பல்கலைகள் உள்ளன.'ஏம்பிசாப்ட்' நிறுவன அதிகாரிகள் கூறுகையில், காலை, 9.00 முதல், 11.00 மணிவரை 2 மணி நேரம் பேராசிரியர்கள் இந்த இ-பாக்ஸ் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுப்பார்கள்.

அதன்பின், இ-பாக்ஸ் திட்ட செய்முறைகளை மாணவர்கள், 5 மணி நேரம் பயன்படுத்துகின்றனர்.

தினமும், 7 மணி நேரம் மாணவர்கள் கல்வியை கற்க முடிகிறது. தற்போது 3 வது வாரம் துவங்க உள்ள நிலையில், 80 சதவீத மாணவர்கள் இணைந்து பயன்பெற்று வருகின்றனர் என்றனர்.


கொரோனா காரணமாக, 'ஏம்பிசாப்ட்' நிறுவனம் இ-பாக்ஸ் திட்டத்தை இலவசமாக வழங்க வேண்டும் என, மத்திய மனித வளமேம்பாட்டு துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவுறுத்தியது.

16 நாட்களுக்கும் மேலாக இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி டுவிட்டரில் பின் தொடர்ந்து லைக் செய்துள்ளார்.

No comments:

Post a Comment