ஆரோக்கிய சேது' செயலி டவுன்லோடு செய்வது எப்படி? - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

ஆரோக்கிய சேது' செயலி டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற செயலியை(ஆப்) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.ஸ்மார்ட் போன்களில் செயல்படும் இந்த செயலி, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் செயல்படும்.எப்படி செயல்படுகிறது

?* கூகுள் பிளே ஸ்டோரில் ஆரோக்கிய சேது செயலியை தேர்வு செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்

* செயலியை பதிவிறக்கம் செய்த உடன், எந்த மொழியில் செயல்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.*

 இதன், பின்னர், இந்த செயலி எதற்காக பயன்படுகிறது.

எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்படும்

.* மொபைல் ப்ளூடூத், இயக்குவதற்கான அனுமதி, தகவல்களை அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கான அனுமதியை கேட்கும். அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்

.* இருப்பிடத்திற்கான அனுமதி, ஜிபிஎஸ் பயன்படுத்தி கொள்வதற்கான அனுமதியை கேட்கும்* இதனை கொடுத்த உடன், செயலியின் சேவை, விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் பற்றிய விளக்கம் இருக்கும். அதனை படித்துவிட்டு ஒப்பு கொள்ள வேண்டும்.


* பின்னர், நமது மொபைல் எண்ணை கேட்கும். அதனை பதிவு செய்த உடன், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் , நமது மொபைல் போனுக்கு வரும்.

அதனையும் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்

.* இதன்பின் செயலியில் நமது பெயர், வயது, தொழில், பாலினம், வெளிநாடுகளுக்கு சென்றோமா என்ற தகவல்கள் கேட்கப்படும். அதை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, நலமுடன் இருக்கிறோமா என்ற 20 நொடிகள் சுயசோதனை செய்யலாமா என்ற அனுமதி கேட்கும். இதற்கு பதிலளிக்கலாம்.


 அல்லது பின்னர் பார்த்து கொள்கிறேன் என்ற வாய்ப்பை தேர்வு செய்யலாம்*

இது அனைத்தும் முடிந்த பின்னர், கொரோனா பாதித்த நபரின் அருகில் சென்றால், இந்த செயலி மூலம் எச்சரிக்கை செய்யப்படும்

No comments:

Post a Comment