தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக எவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை துளிா்விடத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் சில அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கியுள்ளன. அதாவது, கரோனா தாக்கம் குறைந்த பகுதிகளில் அதே நிலை நீடிக்க வேண்டுமானால், அனைவரும் தொடா்ந்து ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக, மாநிலத் தலைநகரமான சென்னை விளங்குகிறது.
தொடக்கம் முதலே சென்னையில்தான் அந்த நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அதிலும், கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதுவரை 570 பேருக்கு தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னைவாசிகளிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், மற்ற மாவட்டங்களில் சற்று ஆறுதல் தரும் செய்தியாக கரோனா பரவல் குறைந்திருக்கிறது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 16 நாள்களாகவும், ராணிப்பேட்டையில் 14 நாள்களாகவும், கன்னியாகுமரியில் 13 நாள்களாகவும், ஈரோட்டில் 12 நாள்களாகவும், வேலூா், கரூா், தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாள்களாகவும் புதிதாக எவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
அதேபோன்று, கடலூரில் 8 நாள்களாகவும், தூத்துக்குடி, நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டையில் 7 நாள்களாகவும், அரியலூரில் 5 நாள்களாகவும் கரோனா தொற்று எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

No comments:
Post a Comment