தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் புத்திசாலிகளாக உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா தடுப்பு பணியில் பணியாற்ற, விருப்பம் தெரிவித்து ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். வரும் கல்வியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலா, 50. நடுநிலைப்பள்ளிகள், 35, மற்றும் 30 துவக்கப்பள்ளிகளை தரம் உயர்த்த, முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு தரம் உயர்த்திய பின், நடப்பாண்டில் அந்தந்த வகுப்பு வாரியாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கொரோனா விலகியதற்கு பின், இதற்கான பணிகள் துவங்கும். அனைத்து வகுப்புக்கும், பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதேபோல், பள்ளி திறந்ததும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்க ஷூக்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மாணவர்களும் வீட்டில் உள்ளனர்.
இவர்கள் பாடம் சார்ந்த தகவல் தொடர்புக்காக, யூ-டியூப் மற்றும் கல்விச் சேனல் மூலமாக வழிகாட்டப்படுகின்றனர். தமிழகத்தின் பள்ளி மாணவர்கள், எந்த சூழ்நிலையிலும், எதற்கும் தயாராக உள்ளனர்
. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் புத்திசாலிகளாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment