8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 24, 2020

8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது?

பள்ளிகளில் படிக்காமல், தனியாக தேர்வு எழுதுவோருக்கான, 8ம் வகுப்பு தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது.



தமிழகத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு நடத்தாமல், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 



10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதேநேரத்தில், ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால், தனித்தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தனர். 





இந்நிலையில், 'மே, 4ல், ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முடிந்த பின், 8ம் வகுப்பு தனித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது. 'அனேகமாக, ஜூனில் நடத்தப்படலாம்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment