கல்வி நிறுவனங்களுக்கு 'இஸ்ரோ' அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 24, 2020

கல்வி நிறுவனங்களுக்கு 'இஸ்ரோ' அழைப்பு

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு, தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, 'இஸ்ரோ' அழைப்பு விடுத்துள்ளது.


இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை, 2022ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, இந்திய விமானப்படையின், நான்கு பைலட்டுகளுக்கும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.




இந்நிலையில், இதற்காக பயன்படுத்தப்படும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற் கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு, ஆராய்ச்சி நிறுவனங்களிடம், இஸ்ரோ உதவி கேட்டுள்ளது. 


இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


 கதிர்வீச்சு அபாயம், அவற்றை தணிக்கும் தொழில்நுட்பம், விண்வெளி உணவுக்கான தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் கட்டுப்பாடுக்கான தொழில்நுட்பம், நீண்ட கால பயணத்தில் மனித உளவியலை கணிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட, 18 உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு தேவையான திட்டங்களை வழங்குமாறு, தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்



. ஜூலை, 15ம் தேதிக்குள், திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்படும் திட்டங்களில் இருந்து சிறந்ததை தேர்வு செய்ய, சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment