கரோனா குறித்த சந்தேகங்களுக்கு தானியங்கி குரல் வழி சேவை! - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 9, 2020

கரோனா குறித்த சந்தேகங்களுக்கு தானியங்கி குரல் வழி சேவை!

கொரோனா வைரஸ் பற்றிய சந்தேகம் மற்றும் நமக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய உதவும் வகையில் குரல் வழி சேவை’ அவசர உதவி எண்ணை முதல்வர் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் குரல் வழி சேவை’ என்ற 94999 12345 என்ற தொலைபேசி எண்ணை தொடங்கி  வைத்தார்.

 இதனை டெல்லியில் இருந்து மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் தொடங்கி வைத்தார். இதையடுத்து மத்திய அமைச்சருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் தகவல் பரிமாறிக்கொண்டார்.

 இந்த அவசர உதவி எண்ணை அழைத்தால் முதலில் அந்த எண்ணில் வரும் குரல் அழைக்கக்கூடிய எண்ணை பதிவு செய்துக்கொண்டு உடனடியாக அழைப்பை துண்டித்துவிடும்.


பிறகு அந்த குரல் வழி சேவை எண்ணில் இருந்து அழைத்த எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும். அதன்பிறகு அழைப்பு வரும். அதில் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பொதுமக்கள் எண்கள் மூலம் பதிலளிக்க வேண்டும்.

 அந்த பதில்களுக்கு தகுந்த விளக்கங்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து சந்தேங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment