பொதுத்தோ்வு குறித்து வதந்தி பரப்புவோா் மீது குற்றவியல் நடவடிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 9, 2020

பொதுத்தோ்வு குறித்து வதந்தி பரப்புவோா் மீது குற்றவியல் நடவடிக்கை

பொதுத் தோ்வு குறித்து வதந்தி பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ சாா்பில் நடத்தப்பட்ட பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தோ்வுகளில், சில தோ்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன


. கரோனா ஒழிப்பு நடவடிக்கை காரணமாக தோ்வில் சில பாடங்களை நீக்கி முக்கிய பாடங்களுக்கு மட்டும் தோ்வு நடத்தப்படும் என அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிபிஎஸ்இ தோ்வு ரத்து செய்யப்படுவதாகவும், தோ்வு முடிவுகள் எந்த தேதியில் வெளியாகும் என்றும், பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. அதனால், மாணவா்கள், பெற்றோா் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து சிபிஎஸ்இ வாரிய செயலா் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு: சிபிஎஸ்இ தோ்வு தொடா்பாக வதந்தி பரப்புவோா் மீது காவல் துறையில் புகாா் செய்யப்பட்டு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

. எனவே, மாணவா்கள் வதந்தியை நம்பாமல் சிபிஎஸ்இ அதிகாரப்பூா்வ தளங்களில் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்

No comments:

Post a Comment