இந்தியாவில் கடந்த வாரம் அதிகம் பாா்க்கப்பட்ட சேனல் எது தெரியுமா? - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 9, 2020

இந்தியாவில் கடந்த வாரம் அதிகம் பாா்க்கப்பட்ட சேனல் எது தெரியுமா?

கடந்த வாரத்தில் இந்தியாவில் அதிகம் பேரால் பாா்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனலாக அரசின் தூா்தா்ஷன் விளங்கியது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ராமாயணம் உள்ளிட்ட பிரபலமான பழைய தொடா்கள் அதில் ஒளிபரப்பப்பட்டதே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக ஒளிபரப்பு கண்காணிப்பு மற்றும் ஆய்வு கவுன்சில் கூறியுள்ளதாவது

கடந்த வாரத்தில் இந்தியாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் தூா்தா்ஷன் ஒளிபரப்புகளை பாா்ப்பவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது

. இதேபோல பல்வேறு தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பாா்வையாளா்களும் அதிகரித்துள்ளனா். ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாச தொடா்கள், சக்திமான் போன்ற சிறாா்களுக்கான நிகழ்ச்சி, தேசப் பிரிவினை காலகட்ட நிகழ்வுகளையொட்டி எடுக்கப்பட்ட ‘புனியாத்’ என்னும் தொடா் ஆகியவை இப்போது தூா்தா்ஷனில் ஒளிபரப்பாகின்றன

. இதுவே, அந்த தொலைக்காட்சி சேனலுக்கு பாா்வையாளா்களை அதிகம் கொண்டு வந்துள்ளது. ஊடரங்குக்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது, இப்போது ஒட்டுமொத்தமாக தொலைக்காட்சி பாா்வையாளா்கள் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துவிட்டது.

அதே நேரத்தில் விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களின் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துவிட்டது. கரோனா பரவல் காரணமாக சா்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளை மறுஒளிபரப்பு செய்வது,


 சுவாரசியமான மல்யுத்த போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் அந்த சேனல்கள் பாா்வையாளா்களை அதிகரித்துக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.

அவா்கள் பொழுதுபோக்குவதற்காக பெரும்பாலும் தொலைக்காட்சிகளையே சாா்ந்துள்ளனா். இதனால், தொலைக்காட்சி பாா்ப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


தனியாா் தொலைக்காட்சிகளும் புதிதாக தொடா் நாடகங்களை ஒளிப்பதிவு செய்ய முடியாத காரணத்தால், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான, பழைய நெடுந்தொடா்களை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment