கூகிள்- பே" பயன்படுத்துகிறீங்களா? உங்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

கூகிள்- பே" பயன்படுத்துகிறீங்களா? உங்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

கூகிள்- பே" பயன்படுத்துகிறீங்களா? உங்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்..! "Nearby Spot" ரெடி..!

கொரோனா எதிரொலியால் மக்களுக்கு தேவையான ஒரு சில அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க பெறாமல் நகரங்களில் வாழக்கூடியவர்கள் அவ்வப்போது அவதிக்குள்ளாவது கேள்விப்பட முடிகிறது.

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் மக்கள் சந்திக்க கூடாது என்பதற்காக தற்போது கூகுள்-பே ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி "Nearby Spot" என்ற ஆப்ஷனை google pay வில் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் உள்ளூரில் கிடைக்கக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும், எந்த கடையில் எந்த அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்ற விவரத்தையும் அதன் மூலமே தெரிந்து கொண்டு, வாங்கிக்கொள்ளலாம்.

இந்த ஒரு சலுகை டெல்லி சென்னை மும்பை ஹைதராபாத் புனே உள்ளிட்ட இடங்களில் தொடக்கத்தில் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர "கோவிட் 19 ஸ்பாட்" என்ற ஆப்ஷனும் தொடங்கப்பட்டு, கொரோனா குறித்த முழு விவரம் அதில் கொடுக்கப்பட உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க... பிரதமர் நிவாரண நிதி, பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்க விரும்புபவர்கள் கூட நிதி வழங்கும் பொருட்டு ஆக்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளிலேயே முடங்கி இருக்கும் மக்கள் தற்போது கூகிள் பே, போன் பே உள்ளிட்ட முறைகளில் மற்றவர்களுக்கு பணத்தை செலுத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment