பள்ளி, கல்லுரிகள் எப்போது திறக்கப்படும்? தேர்வுகள் உண்டா ? மத்திய அமைச்சர் பதில் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 5, 2020

பள்ளி, கல்லுரிகள் எப்போது திறக்கப்படும்? தேர்வுகள் உண்டா ? மத்திய அமைச்சர் பதில்


நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது பற்றி ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் தெரிவித்துள்ளார்.


அரசைப் பொருத்தவரை மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம், எனவே, கரோனா நிலைமை பற்றி ஆராய்ந்த பிறகு கல்வி நிலையங்களைத் திறப்பது பற்றி ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடியிருக்க நேரிட்டாலும் மாணவ, மாணவியருக்குக் கல்வியில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளவும் தமது அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் பொக்ரியால் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் கல்வி நிலையங்களைத் திறப்பது பற்றி முடிவெடுப்பது மிகவும் கடினம். ஏப்ரல் 14 ஆம் தேதி நிலைமையை ஆராய்வோம். நிலைமையைப் பொருத்துத் திறப்பதா, மேலும் விடுமுறையை நீடிப்பதா என்று முடிவெடுப்போம் என்றார் அவர்.


ஊரடங்கிற்குப் பிந்தைய நிலைமை எவ்வாறு அமைச்சகம் எதிர்கொள்ளப் போகிறது என்று கேட்டபோது, நாட்டில் 34 கோடி மாணவ, மாணவியர்கள் இருக்கிறார்கள்.

அமெரிக்க மக்கள்தொகையைவிட இது அதிகம், இவர்கள் இந்த நாட்டின் செல்வம். அவர்களுடைய பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்றும் கல்வித் துறையையும் கவனிக்கும் அமைச்சர் பொக்ரியால் தெரிவித்தார்.


ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு தொடராது என்பதைப் போல அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. ஊரடங்கிற்கு முன்னரே பெரும்பாலான கல்வி நிலையங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

மேலும் ஊரடங்கு முடிந்தத்த்தும் நிலுவையிலுள்ள தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஏப்ரல் 14க்கு பிறகும் தடை நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

No comments:

Post a Comment