ஆன்லைன்' வகுப்புகள் நடத்த 'சாப்ட்வேர்' தயாரிக்குது அரசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 30, 2020

ஆன்லைன்' வகுப்புகள் நடத்த 'சாப்ட்வேர்' தயாரிக்குது அரசு

கல்லுாரிகள், ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதற்கு, தமிழக அரசின் சார்பில், புதிய சாப்ட்வேர் தயாரிக்கும் பணி துவங்கிஉள்ளது.


விடுமுறையில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகளை நடத்த, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.


 ஜூலையில் தேர்வுகளை நடத்தும் வகையில், பாக்கி உள்ள பாடங்களை முடிக்க, பேராசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தப் பாடங்களை, 'கூகுள் கிளாஸ் ரூம், ஸ்கைப்' உள்ளிட்டவற்றின் வழியாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், தனியார் செயலிகளை பயன்படுத்துவதில், பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளதால்,தமிழக அரசின் சார்பில்,தனி சாப்ட்வேர் தயாரிக்கும் பணி துவங்கிஉள்ளது. 



தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில், சட்டத்துறை அறிவுறுத்தலில், 'எல்காட்' என்ற, தமிழக மின்னணு கழகம், இந்த பணிகளை துவங்கிஉள்ளது.விரைவில் சாப்ட்வேர் தயாரிக்கப் பட்டு, அதன் வழியாக மட்டுமே, ஆன்லைன் பாடங்கள் நடத்தப்படும் என, சட்டப் பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment