அமெரிக்காவில் முதன் முறையாக வழங்கப்பட்ட உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 16, 2020

அமெரிக்காவில் முதன் முறையாக வழங்கப்பட்ட உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்றால் சிக்கி கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள அமெரிக்காவின் இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்படவுள்ள காசோலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் மத்திய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.இந்த புதிய செயல்பாட்டினால் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு திறைசேரி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்


.கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.


கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment