நீட் தேர்வு: தேர்வு கட்டணம் இந்த தேதிக்குள் செலுத்தலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 16, 2020

நீட் தேர்வு: தேர்வு கட்டணம் இந்த தேதிக்குள் செலுத்தலாம்'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை திருத்த, மே, 3 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னையால், மார்ச், 24ல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே, 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 மே, 3ல் நடக்க இருந்த, நீட் நுழைவு தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பலர், தங்களின் விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை திருத்த, கூடுதல் அவகாசம் கேட்டு, தேசிய தேர்வு முகமைக்கு விண்ணப்பித்தனர்.
அதை ஏற்று, விண்ணப்ப பிழைகளை திருத்துதல் மற்றும் தேர்வு மையங்களை தேர்வு செய்வதற்கான அவகாசத்தை, மே, 3 வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை, மே, 3 வரை செலுத்தலாம் என்றும், தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment