வங்கி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

வங்கி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை

முதியோர் உதவித் தொகையை, வீட்டிற்கே சென்று வழங்கும்படி, வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:முதியோர் உதவித் தொகையை, வீட்டிற்கே சென்று வழங்கும்படி, வங்கி ஊழியர்களுக்கு கூறியுள்ளோம்.அதேபோல், 'பயோமெட்ரிக்' முறையை பயன்படுத்தாமல், கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றும், அறிவுறுத்தி உள்ளோம்.
 சிலர், உடனடியாக பணம் வேண்டும் என்பதற்காக, வங்கிக்கு செல்கின்றனர்; அதற்கும் தடை விதிக்கவில்லை. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, விதிகளை மீறுவோர் மீது, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தன்னார்வலர்கள் சேவை செய்ய தடை இல்லை.சேவை செய்வோரும், சேவை பெறுவோரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment