இவர்களுக்கு கார் சேவை இலவசம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

இவர்களுக்கு கார் சேவை இலவசம்

மருத்துவம் சாராத அவசர தேவைகளுக்கு உதவும் வகையில், இலவச அவசர கால கார் சேவையை, 'மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனம், சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது.அவசர தேவை : இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மருத்துவம் சாராத அவசர தேவைகளுக்கு உதவும் வகையில், இலவச அவசர கால கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
. ஐதராபாத், டில்லி மற்றும் கோல்கட்டாவில், ஏற்கனவே உள்ளது. தற்போது, சென்னையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், பிரசவ காலம் நெருங்கும் பெண்கள் போன்றோர், தங்களது அத்தியாவசிய சேவைகளை பெற பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், மருத்துவ பரிசோதனை, வங்கி சேவை, தபால் சேவை உட்பட, பல்வேறு சேவைகளுக்கும், இந்த வாகன சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள, இதர நபர்களும், இந்த சேவையை பெறலாம். 24 மணி நேரம்சென்னை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன், மாநகராட்சியின் எல்லைக்குள், 24 மணி நேரமும், இந்த சேவை வழங்கப்படுகிறது. 95000 67082 என்ற, மொபைல் எண்ணிற்கு அழைத்தால், இந்த சேவையை பெறலாம்.'இந்த சேவையின் போது, சுகாதாரம், கிருமி நாசினி மற்றும் பாதுகாப்பு தொடர்பான, அனைத்து அம்சங்களும் பின்பற்றப்படுகின்றன' என, மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர், ராம்ப்வீரன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment