ஏழைகளுக்கு உதவ தன்னார்வலர்களுக்கு தடையில்லை: தமிழக அரசு விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

ஏழைகளுக்கு உதவ தன்னார்வலர்களுக்கு தடையில்லை: தமிழக அரசு விளக்கம்

ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ எவ்வித தடையும் விதிக்கவில்லை எனவும், அதற்கான வழிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது

.அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் அத்யாவசிய பொருட்களை நேரடியாக வழங்க தமிழக அரசு தடை விதிப்பதாக செய்தி வெளியானது.


 இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை.

தன்னார்வலர்கள் உதவி செய்வதை தடுக்கவில்லை, உதவி செய்யும் வழிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகினால், அவர்கள் விரும்பும் பகுதியில் உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

கொரோனா பரவலை தடுக்கவே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் உதவுவது போல் தற்போது உதவ முன்வந்தால் கொரோனா பரவ வழிவகுத்துவிடும்.கொரோனா நோய் தொற்றில் இருந்து தன்னார்வலர்கள், மக்களை காக்கவே இந்த புதிய வழிமுறை.

மாவட்ட கலெக்டர் அனுமதியோடு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் ஏழைகளுக்கு உதவலாம். நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள, இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

முதியோர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு உதவ, ஏற்கனவே 58 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.


stopcorona.tn.gov.in

 என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து அரசுடன் ஒருங்கிணைந்து தன்னார்வலர்கள் உதவி செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment