ஆசிரியர்களுக்கு 'ஆன்லைனில்' வகுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 11, 2020

ஆசிரியர்களுக்கு 'ஆன்லைனில்' வகுப்பு

கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு, இலவச ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.



'மெட்ராஸ் டிஸ்லெக்சியா' அமைப்பு, சென்னை ஐ.ஐ.டி.,யின், தேசிய ஆன்லைன் தொழில் நுட்ப தளமான, என்.பி.டெல்., ஆகியன இணைந்து, கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு, கற்பிப்பது குறித்த பயிற்சியை அளிக்கின்றன. 


ஆசிரியர்கள், உளவியல் ஆலோசகர்கள், பேச்சுப்பயிற்சி அளிப்பவர்கள் போன்றோர், இந்த பயிற்சியை பெறலாம். ஆன்லைன் வழியே இலவசமாக, இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். 




வகுப்பறையிலேயே, டிஸ்லெக்சியா மாணவர்களை நெறிப்படுத்த தேவையான வழிகாட்டுதல், பாடங்களை எளிதான முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் தேர்வு நடத்தும் முறை போன்றவை குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது

No comments:

Post a Comment