நாட்டிலேயே முதன்முறையாக திருப்பூரில் அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 1, 2020

நாட்டிலேயே முதன்முறையாக திருப்பூரில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயின் சமூக பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


 இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

அது போல் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் நெருக்கடியான காய்கறி மார்க்கெட்டை பெரிய மைதானங்களுக்கு கொண்டு சென்றுள்ளது அந்தந்த மாவட்ட நிர்வாகம்.

ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவ வைக்கிறார்கள்.இந்த நிலையில் திருப்பூரில் தென்னம்பாளையத்தில் ஒரு காய்கறி சந்தையில் எப்போதும் இல்லாத முயற்சியாக ஒரு கிருமிநாசினி தெளிப்பு பாதையை அமைத்துள்ளனர்.


திருப்பூரில் தினசரி காய்கறி சந்தையில் 7 அடி உயரம், 5 அடி அகலம், 16 அடி நீளத்திற்கு கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன்வழியாக ஒருவர் கைகளில் மேலேதூக்கியவாறு 3 வினாடிகள் நடந்தாலே அவரது உடல் முழுவதும் இருந்த கொரோனா வைரஸ் தொற்று நீங்கிவிடுமாம்.


திருப்பூர் காய்கறி சந்தைக்கு செல்லும் அனைவரும் கிருமிநாசினி சசுரங்கப் பாதை வழியே தான் அனுமதிக்கப்படுகின்றனர்.
சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கிருமி நாசினி சுரங்கபாதை, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment