நுழைவு தேர்வுகளுக்கு அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 4, 2020

நுழைவு தேர்வுகளுக்கு அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசு நடத்தும், பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவித்த பல்வேறு தேர்வுகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான, என்.சி.ஹெச்.எம்., நுழைவு தேர்வு

; இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையின், பிஎச்.டி., நுழைவு தேர்வு; இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலை நுழைவு தேர்வு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கவும், ஏப்ரல், 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, நெட் தேர்வு, மே, 16; சி.எஸ்.ஐ.ஆர்., தேசிய தகுதி தேர்வு, மே, 15; ஆயுஷ் முதுநிலை தேர்வு, மே, 31 என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment