தன்னார்வலர்களாக பணியாற்ற பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 4, 2020

தன்னார்வலர்களாக பணியாற்ற பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம்

கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில், தன்னார்வலர்களாக செயல்பட, பகுதி நேர ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கை:கொரோனா நோய் பரவலை தடுக்க, பிரதமரும், முதல்வரும் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. கொரோனா தடுப்புப் பணியில், தன்னார்வலர்களாக பணியாற்ற, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் விரும்புகிறோம்.

 இதை, பள்ளி கல்வித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடைஉத்தரவு காரணமாக, பள்ளிகள் நடக்காத சூழலில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மார்ச் மாத சம்பளம் விரைவாக கிடைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஏப்ரல், மே மாதத்திற்கான ஊதியத்தையும், தடையின்றி வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment