அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 30, 2020

அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

தமிழக அரசு பிறப்பித்துள்ள, அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு சட்டமன்ற செயலக நிருபர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.



சங்கத்தின் தலைவர் செல்வம், துணைத் தலைவர் வரதராஜன் ஆகியோர், முதல்வருக்கு அனுப்பிஉள்ள மனு:நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, அகவிலைப்படி உயர்வு நிறுத்தம், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து, அரசாணைகளை வெளியிட்டுள்ளது.




இது, கொரோனா தடுப்பு பணியில் உள்ள, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறைப் பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் உற்சாகத்தை குறைக்கும். எனவே, அந்த அரசாணைகள் அனைத்தையும், ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment